உள்ளூர் செய்திகள்

வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

சென்னை: எஸ்.பி.ஐ., வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு செப்., 18ல் தொடங்கும் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:எஸ்.பி.ஐ., வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸில், 9,124 காலி பணியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்துக்கு, 1,516 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்,செப்., 18 ல் தொடங்குகிறது.இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி - மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/na5xiS7KEBBJSrS79 என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்