உள்ளூர் செய்திகள்

தேசிய போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

பல்லடம்: புதுடில்லி, கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் சார்பில், 55வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் நடந்தது.நாடு முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். இதில், சூலூர் கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும், பல்லடம் பகுதி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர் இப்பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் கீர்த்தன், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் பரிசு, யாழ் இனியன், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், மூன்றாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பல்லடம் நடைபயிற்சி நண்பர்கள் குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மூத்த வீரர் தங்கராஜ், வேலுசாமி தலைமை வகித்தனர். பரமசிவம், பழனிசாமி, ரமேஷ், பழனிவேல் ராஜன், செல்வம் உள்ளிட்ட நடைபயிற்சி நண்பர்கள் குழுவினர் பங்கேற்றனர். நண்பர்கள் கால்பந்து அணி செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்