உள்ளூர் செய்திகள்

பள்ளியில் லேப்: அறிக்கை அளிக்க உத்தரவு

திருப்பூர்: தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலை, உபகரணங்கள் இருப்பு, செயல்பாடு மற்றும் செலவினங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாணவர்களுக்கு கணினி அறிவை வழங்கவும், தேர்வுகளை நடத்தவும் மாநிலம் முழுவதும் 6,029 அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை 2019 முதல் எல் அண்ட் டி நிறுவனம் பராமரித்து வந்தது. கடந்த பிப்ரவரியில் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், பல பள் ளிகளில் கணினி, மவுஸ், யு.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னையில் அண்மையில் நடந்த கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில், அரசு பள்ளி உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகு பல பள்ளிகளில் ஆய்வகங்கள் முறையாகச் செயல்படாததும் தெரியவந்தது. இதனையடுத்து, ஆய்வகங்களின் உண்மை நிலை குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது அல்லது தற்போதைய திட்டங்களில் மாற்றங்கள் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்