உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் திறன் பயிற்சி நடந்தது. கள்ளக்குறிச்சியில் தனியார் கூட்டரங்கில் நடந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் பத்மஜா துவக்கி வைத்தார். இதில் இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்திருக்க வேண்டும்.பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் எவரேனும் பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும் அல்லது பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு இருப்பார்கள் என்று சந்தேகம் இருந்தாலும் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும், 1098 என்ற எண்ணிற்கு தெரிவித்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், விதிகள், ஆலோசனைகள், குழந்தைகள் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்