உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் தீபாவளி கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமை தீபாவளியை கொண்டாடினர். 'செடி வளர்ப்போம், வெடி தவிர்ப்போம்' என்ற இலக்குடன் குழந்தைகள் எழுத்து வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.* கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'விழுதுகள்' சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள், கார வகைகள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.* தென்சங்கம்பாளையம் உண்டு, உறைவிட பள்ளி (மலைச்சாரல் பள்ளி) மாணவ, மாணவியர் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பணி பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்