மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம், குரோம்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்தது.இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவுத் திட்டமான 'ஏ.ஐ., சமர்த்' கீழ், தாம்பரம் மாநகராட்சி, சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன், கிரிசாலிஸ் வித்யா லிமிடெட் மற்றும் ஐ.ஐ.டி., சென்னை ஆகியவை இணைந்து, இப்பயிற்சியை நடத்தின. இதில், 70க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் செயல்பாடுகள், நவீன கல்வியில் அதன் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து, ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.மேலும், பாடத்திட்டம் தயாரித்தல், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஏ.ஐ., கருவிகளைப் பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.