பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரிக்கு சி.ஐ.ஐ., விருது
கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் வழங்கப்படும் 2026ம் ஆண்டுக்கான பிளாட்டினம் விருதை பெற்றுள்ளது.புதுடெல்லியில் உள்ள தி லலித் ஹோட்டலில் நடைபெற்ற சி.ஐ.ஐ. உலகளாவிய தொழில்துறை - கல்வித்துறை கூட்டாண்மை மாநாட்டில், கல்வி நிறுவனங்கள் - தனியார் பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தி, மாணவர்களின் கல்வி அறிவை நடைமுறை அனுபவமாக மாற்றுவதில் கல்லுாரி தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளுக்காக, இவ்விருதை பெற்றுள்ளது.தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, மாணவிகளுக்கு அதிக கற்றல் வாய்ப்புகள், புதுமையான முயற்சிகள், சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புகளை உருவாக்க இவ்விருது கூடுதல் ஊக்கமாக அமையும் என்று கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.