உள்ளூர் செய்திகள்

வளர்ச்சியடையாத மாவட்டங்களில் பாலிடெக்னிக் அமைக்க நிதி!

பாலிடெக்னிக்குகளின் திறன் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திட்டத்தின்கீழ், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வளர்ச்சியடையாத 300 மாவட்டங்களில் பாலிடெக்னிக்குகள் அமைப்பதற்கு, ஒரு பாலிடெக்னிக்கிற்கு ரூ.12.3 கோடி வீதம் மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த பாலிடெக்னிக்குகளுக்கு தேவையான இலவச நிலம் மற்றும் அதன் எதிர்கால செயல்பாட்டு செலவு போன்றவற்றை சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த 12.3 கோடி ரூபாய் நிதியானது, மத்திய அரசால் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாவட்டங்களில், 239 மாவட்டங்கள் இந்த நோக்கத்திற்காக நிதியுதவிகளை பெற்றுவிட்டன. அதேசமயம் மீதமுள்ள 61 மாவட்டங்களில் ஆயத்தப் பணிகள் இன்னும் முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்