பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி பணிவாய்ப்புகள்
இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இந்த நிதியாண்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு சில வங்கிகளில் முன்னணியில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் 80 அதிகாரி பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கு இந்தியாவில் 3101 கிளைகளும், வெளி நாடுகளில் 29 கிளைகளும் உள்ளது. வயது வரம்புபாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளன. முழு விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதிபாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை ஏதாவது ஒரு பிரிவிலிருந்து முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறைபாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிகாரி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிகபட்சமாக 24 மாதங்கள் வரை புரொபேஷன் அடிப்படையில் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு 06.03.2011 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறைபாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.400/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேக இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். இந்த முயற்சிகளின் முதல் கட்டமாக முதலில் இந்த வங்கியின் இணைய தளத்திற்கு சென்று விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் படிவத்தில் உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி தயாராக வைக்கவும். இது எழுத்துத் தேர்வு/நேர்காணல் என்ற நிலைகளின் போது தேவைப்படும். தற்போது இதனை அனுப்பத் தேவையில்லை. முக்கிய தேதிகள்ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 03.01.2011எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 06.03.2011இணையதள முகவரி: bankofindia.com