எல்சாட் மதிப்பெண்ணை அங்கீகரிக்கும் ஐ.ஐ.டி-காரக்பூர்
அறிவுசார் சொத்துரிமை சட்டம் சம்பந்தமான தனது 3 வருட எல்.எல்.பி. படிப்பிற்கு, ஐ.ஐ.டி-காரக்பூர், எல்சாட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய சட்டக் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு நடத்தப்படும் இந்த எல்சாட்-இந்தியா தேர்வானது, பலவித திறமைகளை மதிப்பிடுவதாக உள்ளது என்ற முறையில் ஐ.ஐ.டி-காரக்பூர் இந்த தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க முதல்முறையாக முடிவு செய்திருப்பதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எல்சாட்-இந்தியா தேர்வை அங்கீகரிக்கும் முதல் ஐ.ஐ.டி. இதுதான். எல்சாட்-இந்தியா மற்றும் எல்சாட்-குளோபல் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள் ஐ.ஐ.டி-காரக்பூரிலுள்ள அறிவுசார் சொத்துரிமை சம்பந்தமான 3 வருட எல்.எல்.பி. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.