சிறந்த பல்கலை.யாக ஹார்வேர்ட் பல்கலை. தேர்வு
உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத்தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னதாக உலகளவில் கல்வித்துறையி்ல் சிறந்து விளங்கும் 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்ய கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து உளளிட்ட 131 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 388 கல்வி மையங்கள் ஆய்வு செயயப்பட்டு, பின்னர் அவற்றில் இருந்து 45 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 10 பல்கலைக்கழகங்கள் தேர்வாகின. இதில் மிகவும் பழமைவாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.