ஐ.ஐ.எம். பெங்களூர் கல்வி கட்டணம் உயர்கிறது
பெங்களூரில் உள்ள இந்தியன் மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.-பி) அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துகிறது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஒரு ஆண்டுக்கான நிர்வாக மேலாண்மை (இ.பி.ஜி.பி.) பாடப் பிரிவிற்கு ரூ.1.8 லட்சமாகவும், முதுகலை மேலாண்மைக்கு ரூ.13 லட்சமும், முதுகலை சாப்ட்வேர் என்டர்பிரைஸ் மேனேஜ்மென்டுக்கு ரூ.9.5 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படும். அதேப்போல, முதுகலை நிர்வாக மேலாண்மைக்கு ரூ.20.55 லட்சம், பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்டுக்கு ரூ.9.75 லட்சம் என கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.