உள்ளூர் செய்திகள்

சுனாமியால் வெளிநாட்டு வாய்ப்பை இழந்த மாணவிகள்

சென்னையை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்த ஜி.எஸ். வித்யா பவானி, திருமுல்லைவாயலைச் சேர்ந்த வி. பத்ம சுகன்யா ஆகியோர் மதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகேடா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகின்றனர். இவ்விரு மாணவிகளும், இந்தியா- ஜப்பான் இடையே பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜப்பானில் 4 மாதங்கள் கல்வி பயில்வதற்காக கிடைத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ந்திருந்தனர் கடந்த வாரம் ஜப்பானில் சுனாமி வரும் வரை. மார்ச் 27ஆம் தேதி டோக்கியோவிற்கு கிளம்ப மகிழ்ச்சியோடு இருந்த மாணவிகளுக்கு, ஜப்பானில் சுனாமி என்ற செய்தி பேரிடியாக இருந்தது. இந்தியாவின் சார்பில் ஜப்பானுக்கு செல்லும் மாணவர்களாக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், சுனாமி செய்தி கேட்ட போது கண்ணீரே வந்துவிட்டது என்று இரு மாணவிகளும் உணர்ச்சி பொங்க கூறினர். இந்த நல்ல வாய்ப்பு இப்போது தவறிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் ஜப்பான் செல்வோம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்