தேர்வு எழுதும் மாணவர்களே வினாத்தாளை கவனியுங்கள்
வரும் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் கேள்வித்தாளை வாங்கியதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். வினாத்தாளை படிப்பதற்கு என்று தனியாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே இந்த குறிப்புகள். தேர்வு எழுதும் மாணவர்களே வினாத்தாளை கையில் பெற்றதும் எந்தவித பதற்றமும், சிந்தனையும் இல்லாமல் பொறுமையுடன் வாசித்து பாருங்கள். அதில் உள்ள முக்கியமான தகவல் என்னவென்று உற்று கவனியுங்கள், இல்லையெனில் முக்கியமான தகவல்களை தவறவிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நன்கு படிக்கும் மாணவர்கள் வினாத்தாளை கையில் வாங்கியதும் சுலபமானதா, கடினமானதா அல்லது குழப்பமானதா என்று முடிவு செய்து விடலாம். வினாத்தாளை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக வாசித்த பின்பு விடைகளை எழுத ஆரம்பிக்கவும். முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் விதி முறைகளை கடைபிடியுங்கள். பின்பு முக்கியமான வினாக்களில் கட்டாயமாக எழுதபட வேண்டியதை தேர்ந்தெடுங்கள். வினாத்தாளை முழுவதுமாக படித்து விட்டு முதலில் நன்கு தெரிந்த நம்பிக்கையுள்ள வினாக்களை தேர்ந்தெடுத்து பின்பு விடைகளை எழுத துவங்குங்கள். விடைகளை முழுவழும் எழுதி முடித்தவுடன் ஏதேனும் வினாக்கள் விடுபட்டுள்ளதா அல்லது வினாக்களின் எண்களை சரியாக எழுதி இருக்கின்றீர்களா என்று ஆராய்ந்து பார்க்கவும்.