ஐ.ஏ.எஸ். தேர்வில் கரூர் மாணவர் சாதனை
மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்விற்கு 400 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. அத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிட்டது. அதில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற கரூரை சேர்ந்த ஜி.கண்ணன் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, நிர்வாகிகள் மல்லிகா மற்றும் வெற்றி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.