உள்ளூர் செய்திகள்

‘மனித குல மேம்பாட்டிற்கான கல்வி முறை’

சென்னை: காஞ்சி மாவட்ட சத்ய சாயி நிறுவனம் சார்பில் சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் ‘மனித குல மேம்பாட்டிற்கான கல்வி முறை’ குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. சாய் பஜனை, வேத பாரா யணத்துடன் விழா துவங்கியது. கல்லூரி முதல்வர் சுமித்திர வரவேற்றார். தமிழ்நாடு சத்ய சாயி நிறுவனத்தின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பலர் பல்வேறு மனித நேய தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். ‘லேபர் ஆப் லவ்’ என்ற வீடியோ படக்காட்சி, மாணவிகளின் கலந்துரையாடல் ஆகியவை இடம் பெற்றன. இந்த கருத்தரங்கில் சொல்லப் பட்ட கருத்துக்கள் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாவட்டக் கல்வி பொறுப்பாளர் ஜோதி ஜெயராமன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை குரோம்பேட்டை சத்ய சாயி சமிதியும், கல்லூரி நிர்வாகமும் இணைந்துச் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்