உள்ளூர் செய்திகள்

இணையவழி தமிழ் கற்றல் ஆக., 1ல் வகுப்பு ஆரம்பம்

பெங்களூரு: தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில், ஆகஸ்ட் 1 முதல் இணையவழியில், தமிழ் கற்றல் வகுப்புகள் துவங்குகிறது.அறக்கட்டளை தலைவர் குமணராசன், செயலர் தனஞ்செயன் அறிக்கை:தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில், ஆன்லைன் தமிழ் கற்றல் வகுப்பு நடத்தப்படுகிறது. செழுமையான தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2021 முதல் 72 நாடுகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையே புகழ் பெற்று, நல்ல முறையில் இயங்கி வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி, 28வது பேட்ச் வகுப்பு துவங்க உள்ளது. உங்கள் வீட்டில் இருந்தபடியே, தமிழ் கற்கும் இந்த வளமான வாய்ப்பை தவற விடாதீர்கள்.இதில் பதிவு செய்ய, பின்வரும் இணைப்பில் உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும். https://forms.gle/UsEbHUqqMr718vyz7. பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதி. பாட அமைப்பு: இந்த வகுப்புகள், திங்கள் முதல் வெள்ளி வரை நான்கு வாரங்கள் நடக்கும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமை பாடங்களை பயிற்சி செய்து கொள்ளலாம். பாட விருப்பங்கள்: அடிப்படை தமிழ் - நிலை 1: மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடைநிலை தமிழ் - நிலை 2: மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. உயர் தமிழ் - நிலை 3: மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. அடிப்படை தமிழ் இலக்கணம் - நிலை 4: இரவு 7:10 மணி முதல் 8:00 மணி வரை. மேலும் விபரங்களுக்கு வாட்ஸாப் எண் 78991 92588 அல்லது tamilfoundationblr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்