பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 19,756 பேர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 19,756 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ல் துவங்கி ஏப்ரல் 10 ல் நிறைவடைகிறது. இத்தேர்வை ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களில் 5, 620 மாணவர்கள், 5,872 மாணவிகளும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 4,250 மாணவர்கள், 4,114 மாணவிகளுமாக, மொத்தம் 19,756 பேர் எழுத உள்ளனர்.