ஆகாஷ் நிறுவனம் தொடங்கிய அன்தே 2025 திட்டம்
சென்னை: ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தனது 16 ஆண்டுகள் கல்வி சேவையை முன்னிட்டு 2025ஆம் ஆண்டிற்கான ஆகாஷ் தேசிய திறன்தேர்வு (ANTHE)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இந்த தேர்வு, அவர்கள் திறனுக்கு ஏற்ப 100% வரை கல்வி உதவித்தொகையும், ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசும் வழங்குவதாக அறிவித்துள்ளது.அன்தே தேர்வுகள் அக்டோபர் 4 முதல் 12 வரை ஆன்லைனிலும், அக்டோபர் 5 மற்றும் 12 அன்று ஆப்லைனிலும் நடைபெறும். தேர்வு 1 மணி நேரம் நீடிக்கும். தேர்வுக் கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னதாக பதிவு செய்தவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.மாணவர்கள் ஆன்லைனில் https://anthe.aakash.ac.in/home இல் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள ஆகாஷ் மையத்தில் நேரில் பதிவு செய்யலாம்.ஏஇஎஸ்எல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் மெஹ்ரோத்ரா கூறுகையில், அன்தே தேர்வு மாணவர்களுக்கு கனவுகளை நனவாக்கும் வாய்ப்பாக மாறியுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்கே அதிகம் உதவுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வழியில், நாங்கள் தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்றார்.