உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலைத்திருவிழா போட்டி நவ. 22ல் துவக்கம்

தேனி: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரியில் நவ., 22 முதல் 24 வரை நடக்கிறது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திறனை வளர்க்க கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட கலைத்திருவிழா போட்டி வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரியில் நவ., 22 முதல் 24 வரை நடக்கிறது. மாவட்டத்தில் அரசு உதவி பெறும் 67 நடுநிலைப்பள்ளி, 11 உயர்நிலைப்பள்ளி, 27 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 2ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். காய்கறி சிற்பம், களிமண்சிற்பம், தனி நடனம், குழு நடனம், பலகுரல், நாடகம் உள்ளிட்ட பல போட்டிகள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்