டிட்டோ ஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம்; ஜன.27ல் உண்ணாவிரதம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடக்கக் கல்வித்துறையில் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ஐ, ரத்து செய்ய வேண்டும், டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணைகளை வெளியிட வேண்டும் போன்றவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத்தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார். மாநில செயலாளர் முருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் மரியசெல்வம், துணைத் தலைவர் ஆனந்த், டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன், பொறுப்பாளர்கள் அம்சராஜன், தமிழ்மணி - ராஜாங்கம், செல்வம், வணங்காமுடி, அருள்தாஸ், குமார் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறுகையில், ஜன. 27ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.