உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 32 தனித்தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டத்தில் போடி, கம்பத்தில் தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 227 பேரில், 195 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. போடி தேர்வு மையத்தில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த, 32 பேருக்கு தேர்வு எழுத, அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வுதுறை மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டும் மறுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் பட்டியலில், மாணவி பவித்ரா உள்ளிட்ட, 32 பேர் நீக்கல் என வந்துள்ளது. இதனால் இந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கபடவில்லை. தேர்வுக்கான முதன்மை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பட்டியலில், இவர்களது பெயர்கள் நீக்கல் என வந்துள்ளது. இதனால் நாங்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியவில்லை என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்