உள்ளூர் செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

காரைக்கால்: காரைக்காலில் அரசு பள்ளியில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருநள்ளார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வினோதினி முதலிடம் பிடித்தார். இவருக்கு, ரூ. 50 ஆயிரம் பரிசு தொகையை, புதுச்சேரி அரசு வழங்கியது. குழந்தைகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். பரிசு பெற்ற மாணவியை, காரைக்கால் கலெக்டர் வல்லவன் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்