உள்ளூர் செய்திகள்

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கு வாழ்த்து

கரூர்: ஜப்பான் பல்கலையில் ஆய்வுப்பணிக்காக, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியை சேர்ந்த 9 மாணவர்கள் செப்.,9ம் தேதி புறப்பட்டனர். அவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி, வழியனுப்பி வைத்தனர்.கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், ஜப்பான் உயர் கல்வி நிறுவனத்துக்கு செல்லும் மாணவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜப்பான் அரசின் நிதியுதவி திட்டமான, சகுரா சயின்ஸ் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில், இந்திய மாணவர்கள் ஜப்பான் பல்கலைகளுக்கு சென்று அங்குள்ள தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து திரும்புகின்றனர்.இத்திட்டத்தில், கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 9 பேர் ஜப்பானின் நிப்பான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உயர்கல்வி நிறுவனத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் செப்.,9ம் தேதி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றபோது வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.நிர்வாக இயக்குனர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முருகன், கல்லுாரி ஜப்பானிய மொழி ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்