மருத்துவ கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு
மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவர்கள் பெற்றுள்ள கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேதி - நேரம் - பிரிவு - கட்-ஆப் மதிப்பெண் ஜூன்30 -காலை 9 மணி சிறப்பு பிரிவினர்(விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள்) ஜூலை1- காலை 9 மணி - பொது பிரிவு - 200-199.50 மதியம் 2 மணி பொது பிரிவு 199.50 -199.25 ஜூலை2 - காலை 9 மணி பொது பிரிவு 199.25-198.75 மதியம் 2 மணி பி.சி., 198.75-198.50 ஜூலை4 -காலை 9 மணி பி.சி., 198.50-198.00 மதியம் 2 மணி பி.சி., 198.00-197.75 மதியம் 2 மணி பி.சி.எம்., 198.75-196.25 ஜூலை5 - காலை 9 மணி எம்.பி.சி., 198.75-197.25 மதியம் 2 மணி எம்.பி.சி., 197.25-196.25 ஜூலை6 - காலை 9 மணி எஸ்.சி., 198.75-191.75 மதியம் 2 மணி எஸ்.சி.ஏ., 198.50-188.00 எஸ்.டி., 197.25-185.25 கவுன்சிலிங் தேதி குறித்து, மாணவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப்பெறாதோர், தங்களின் கவுன்சிலிங் தேதியை, http://www.tnhealth.org/ இணையதளத்தில் அறியலாம். சிறப்பு பிரிவினருக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு அலுவலகத்திலும், பொதுப் பிரிவினருக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கிலும் கவுன்சிலிங் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.