உடல் தகுதிச்சான்று பெறும் வசதி
பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது உடல் தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். எனவே மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்வு வளாகத்திலேயே உடல் தகுதிச் சான்று விநியோகிப்பதற்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில், 150 செலுத்தி, உடல் தகுதிச் சான்று படிவத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார மையத்தில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றி பெற்றுக் கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கலந்தாய்வு வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் உடல் தகுதிச் சான்று பெற வேண்டியது கட்டாயம். இணைப்பு கல்லுரிகளில் சேரும் மாணவர்கள் விருப்பப்பட்டால் இந்த அரங்கில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.