உள்ளூர் செய்திகள்

ஜம்முவில் கிளை துவக்கும் ஐ.ஐ.எம்.சி.

இந்தியாவின் முதன்மையான மாஸ் கம்யூனிகேஷன் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (ஐ.ஐ.எம்.சி.) ஜம்முவில் ஒரு கிளையைத் துவக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜம்மு மாநில அரசு அதிகாரிகளுடன் ஐ.ஐ.எம்.சி. இயக்குநர் சுனித் டாண்டன் பேச்சு நடததியதாக அரசுச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்முவில் ஐஐஎம்சி அமைக்கத் தேவைப்படும் 5 முதல் 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து கொடுப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டிலேயே இங்கு பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுவிட வேண்டும். புதிய கட்டடம் கட்டப்படும் வரை மாணவர்களுக்கும், வகுப்புகள் நடத்தவும் தற்காலிகமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாகவும் அரசு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஐம்மு அன்ட் காஷ்மீர், கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் நான்கு புதிய உள்ளூர் மையங்களை அமைக்க ஐ.ஐ.எம்.சி. அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஐஐஎம்சிக்கு டெல்லி, ஒரிசாவில் கிளைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்