உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியர் விரும்பும் இ.சி.இ.,

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் பாடவாரியாக மாணவர்களின் சேர்க்கை பட்டியலை பார்க்கும் போது ஒரு விஷயம் நன்கு தெரியவரும். அதாவது, எந்த பாடப்பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனரோ அதை மாணவிகள் குறைந்த அளவே தேர்வு செய்திருப்பார்கள். அதேப்போல மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகமாக இருக்கும் பாடப்பிரிவை மாணவர்கள் குறைந்த அளவே தேர்வு செய்திருப்பார்கள். பொதுவாக எல்லாப் பாடப்பிரிவுகளுக்குமே இந்த விகிதாச்சாரம்தான் நிலவுகிறது. ஆனால் விதிவிலக்காக எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவை மட்டும்தான், மாணவ, மாணவியர் ஒரே விகிதத்தில் தேர்வு செய்துள்ளனர். அதாவது, இப்பிரிவில் ஜுலை 18ம் தேதி வரை நடந்த கலந்தாய்வின் முடிவில், 3054 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 1,521 மாணவர்களும், 1533 மாணவிகளும் அடங்குவர். இந்தப் பாடப்பிரிவில் மாணவ, மாணவியரின் சேர்க்கை விகிதம் சமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்