நர்சிங் டிப்ளமோ படிப்பிற்கான கவுன்சிலிங்
சென்னை: பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளை தொடர்ந்து, நர்சிங் டிப்ளமோ படிப்பிற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 8 ம் தேதி துவங்குகிறது. சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், ஆக. 13 வரை நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு, &'கட் - ஆப்&' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்கள் கவுன்சிலிங் தேதியை மருத்துவக் கல்வி இயக்கத் தேர்வுக் குழு இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்கத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.