காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்து வந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.