பண்ருட்டியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமியுடன் இணைந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா நடத்தி வருகிறது. இதில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது. பண்ருட்டியில் 12ம் தேதி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சென்னை சாலை ரங்கா மகாலில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம். கண்டிப்பாக பள்ளி சீருடையில் வரவேண்டும். பெற்றோர்களும் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தேர்வு குறித்த கருத்துரைகள் வழங்குகின்றனர். மாணவர்கள் குறிப்பெடுக்க நோட்டு, பேனா மற்றும் ஜெயித்துக் காட்டுவோம், உடம்பும் மனசும், மாணவிகளுக்கு மட்டும் உள்ளிட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது