உள்ளூர் செய்திகள்

பல் மருத்துவ மாணவர்களும் எதிர்க்கின்றனர்!

தமிழக அரசு, இப்பிரச்னையில் தலையிட்டு தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என, பல் மருத்துவ மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தனியார் பல் மருத்துவ கல்லூரி மாணவர் ரமேஷ் கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் புதிய விதியால், தனியார் பல் மருத்துவ மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பை தொடர முடியாது. இருப்பினும், கல்லூரிக்கு சென்று படித்து மீண்டும் தேர்வு எழுத, தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், 60 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றன. ஏற்கனவே, நாங்கள் ஆண்டுக்கு, 1 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். கூடுதலாக, 60 ஆயிரம் ரூபாய் செலுத்த மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, தேர்ச்சி முறையில் அறிமுகப்படுத்தி உள்ள புதிய விதியை, ரத்து செய்ய வேண்டும். நாங்கள் இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு ரமேஷ் கூறினார். அமைச்சருடன் ஆலோசனை இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மயில் வாகனன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சந்திப்பின்போது, தேர்வு முடிவை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்