சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டம், மாணவர்கள், வேலை தேடுவோர், பணியாளர்கள் ஆகியோருக்கு, இரண்டு மாத சான்றிதழ் படிப்புகளை, இம்மாதம், 25ம் தேதி, சென்னையில் துவக்க உள்ளது. இதில், பிராட்பேண்ட், இன்டர்நெட், நெட்வொர்க்கிங், மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான, கல்வி தகுதி, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.rttcchennai.bsnl.co.in, www.chennai.bsnl.co.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.