உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிப்பதற்கு அழைப்பு

கரூர்: "சென்னை நேரு விளையாட்டு மைதான விடுதில் சேர விண்ணப்பிக்கலாம்" என, கலெக்டர் ஜெயந்தி கூறினார். அவர் வெளியிட்ட அறிக்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேரு விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கும், அங்குள்ள உள் விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 2013-14 ஆண்டுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளை சேர்ந்தவர்கள், தங்க அனுமதி வழங்கப்படும். தடகளம், கால்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு மாநில அளவிலான தேர்வு நடக்கிறது. இதற்கு ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதிக்குள் அலுவலர் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுமட்டுமல்லாது சிறப்பு விளையாட்டு விடுதிக்கான தேர்வு நேரு விளையாட்டு மைதானத்தில், வரும் 10ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்