உள்ளூர் செய்திகள்

கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. புதிய சலுகை

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) இதுகுறித்த  ஆணையைப் பிறப்பித்துள்ளது. ஒரே அறக்கட்டளையின் கீழ் நடைபெறும் பல கல்வி மையங்களில் பொறியியல் மற்றம் தொழில்நுட்பம், நிர்வாகப் படிப்பு, பார்மசி, ஆர்க்கிடெக்ச்சர், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி, கலைப் படிப்புகள் நடைபெறுகின்றன. ஒரே வளாகத்தில் உள்ள இதுபோன்ற வெவ்வேறு படிப்புகளுக்கு பொதுவான வசதிகளை உருவாக்கி, அதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்த அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று நடைபெறும் கல்லூரிகளில் இதுபோன்ற வெவ்வேறு படிப்புகள் நடைபெற்றால் அவர்கள் பொதுவான கேன்டீன், நூலகம், கணினி மையம், நிலம், கட்டடம், ஆய்வகம் மற்றும் அலுவலர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக, ஒரு லட்ச ருபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். கல்வியாளர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு இந்த வசதிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். இவ்வாறு ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்