உள்ளூர் செய்திகள்

பழங்குடியின பல்கலை மாணவர்களுக்கும் விடுதி

பழங்குடியின பிரிவைச் சேர்ந்த (எஸ்.டி.,) மாணவர்களுக்கான விடுதிகளைக் கட்டுவதில் சில புதிய சலுகை மாற்றங்களை மத்திய அரசின் மத்திய பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. பழங்குடியின துணைத் திட்டப் பகுதிகளில் ஆஸ்ரம் ஸ்கூல்களை அமைப்பதிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை பழங்குடியினத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். மாணவ மாணவியருக்கான விடுதித்திட்டம் இனி இப்பல்கலைக்கழங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதனைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டில் சில நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளைக் கட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் 90 சதவீதத்தையும் பிற பல்கலைக்கழகங்கள் 45 சதவீதத்தையும் நிதியாகப் பெற முடியும். மத்திய அமைச்சகம் நக்சலைட் பயமுள்ள பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளாக இருந்தால் அந்த இடங்களில் விடுதிகள் மற்றும் ஆஸ்ரம் பள்ளிகளைக் கட்ட மாநில அரசுகளுக்கு 100 சதவீத நிதியுதவி தரப்படவுள்ளது. இவ்வாறல்லாத பகுதிகளில் நிதி ஒதுக்கீட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் பங்கீட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் இப்பள்ளிகள் மற்றும் விடுதிகளை நிறுவுவதற்கான செலவு மொத்தத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். இத்தகவல்களை பழங்குடியின மேம்பாட்டு அமைச்சர் ஓரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்