உள்ளூர் செய்திகள்

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

பழநி: பழநி சுப்ரமண்யா இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், அவர்களது தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஆகஸ்ட் 9க்குள் தங்கள் கவிதை, கட்டுரைகளை சுப்ரமண்யா இன்ஜினியரிங் கல்லூரி, சுக்கமநாயக்கன்பட்டி, பழநி என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களும், அதிக மாணவர்கள் கலந்துகொள்ளும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94433 50511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என  கல்லூரி முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்