உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி

திருவண்ணாமலை: மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்படுவதை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலை இணைந்து, மண்டல அளவிலான மராத்தான் போட்டி திருவண்ணாமலையில் நேற்று நடத்தியது. கல்லூரி தலைவர் ராமசந்திரஉபாத்யாயா தலைமை வகித்தார். போட்டியை, கல்லூரி செயலாளர் சீனி. கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவிகளுக்கு, கிரிவலப்பாதையில் உள்ள எமலிங்கம் கோவிலில் இருந்து, சண்முகா தொழிற்சாலை கல்லூரி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரமும், மாணவர்களுக்கு கிரிவலப்பாதை சாய்பாபா கோவிலில் போட்டி துவங்கி, மணலூர் பேட்டை சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை கல்லூரி வரை, 10 கிலோ மீட்டர் தூரமும் சென்றடைந்தது. இப்போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், திருவள்ளுவர் பல்கலை உடற்கல்வி இயக்குனர் அமல்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்