உள்ளூர் செய்திகள்

சர்வதேச இளைஞர் தின ஊர்வலம்

தளவாய்புரம்: தளவாய்புரத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தின ஊர்வலம் நடந்தது. வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் விஜயகுமார் முன்னிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. யுத்தம் இல்லா உலகம், வலிமையான நாடு, வளமான நாடு குறித்த கோஷங்கள் எழுப்பபட்டன. ஏற்பாட்டை ஜெஆர்சி கவுன்சிலர் ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்