விருதுநகர் மாவட்ட கல்விச் செய்திகள்
இன்ஜினியரிங் தின விழா வெம்பக்கோட்டை: சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை சார்பில் இன்ஜினியரிங் தின விழா சிரிஸ்டி 14 எனும் தலைப்பில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளார் சோலைசாமி நினைவுப் பரிசு வழங்கினார். மாணவன் காளிசங்கர் நன்றி கூறினார். அறிவியல் கண்காட்சி விருதுநகர்: மேலவரகுணராமபுரம் மே.நா., நாடார் உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.