கிளியனூர் அங்கன்வாடி கட்டடம் சீரமைக்கப்படுமா?
வானூர்: கிளியனூர் அங்கன்வாடி கட்டடம் ஓட்டை வழியாக மழைநீர் ஒழுகுவதால் குழந்தைகள் படிக்க முடியாத சூழல் உள்ளது. வானூர் ஒன்றியம் கிளியனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இங்கு நரிகுறவர்கள் குழந்தைகள் உள்பட 23 குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையில் அங்கன்வாடி கட்டடம் ஓட்டை வழியாக தண்ணீர் கசிகிறது. இதனால் இருப்பு வைத்துள்ள அரிசி, பருப்புகள் நனைந்து வீணாகி வருகிறது. மழை பெய்யும் நேரத்தில் குழந்தைகள் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சேதமாகியுள்ள பழைய அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.