மாநில அளவிலான யோகா போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி யோகா சங்கம் சார்பில், 29வது மாநில அளவிலான ’யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் போட்டி’ முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் நடந்தது. குழந்தைகளின் யோகாசனம் மற்றும் சதே சிறப்பு பள்ளி மாணவ, மாணவியரின் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் விருது மற்றும் ரொக்கப்பரிசுகளை, அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், அரசு கொறடா நேரு ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் புலவர் பட்டாபிராமன், அர்த்தனாரி மற்றும் யோகா வல்லுனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சங்கத் துணைச் செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.