உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

கோவை: கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி துவங்கியது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான டி.எஸ்.எஸ்., அண்ட் கோ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, எஸ்.என்.ஆர்., கல்லுாரியில் துவங்கியது. கல்லாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் அணியும், டி.ஏ., ராமலிங்க செட்டியார் மேல்நிலைப் பள்ளிப் அணியும் மோதிய ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட, 25 ஓவரில், சச்சிதானந்தா அணி, 6 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அணியின் சங்கமேஸ்வர் 68 ரன்கள் எடுத்தார். ராமலிங்க செட்டியார் பள்ளி வீரர் ராகவேந்திரன் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்களை சாய்த்தார். அடுத்து விளையாடிய ராமலிங்க செட்டியார் மேல்நிலைப் பள்ளி அணி, 15.2 ஓவரில், 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சங்கமேஸ்வர், 20 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை சாய்த்தார். தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதிய ஆட்டத்தில், முதலில் விளையாடிய தர்மசாஸ்தா அணி, 17 ஓவர்களில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வித்யா நிகேதன் வீரர் ஜெயின் ஐந்து விக்கெட்களையும், அமர் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர். இரண்டாவதாக விளையாடிய வித்யா நிகேதன் அணி, 13.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 62 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் முஸ்தபா 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்