கோவை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
கோவை எஸ்.என்.ஆர் சன்ஸ்(தன்னாட்சி) கல்லூரியின் பயோடெக்னாலஜி துறை, International Seminar on “Infection and Immunity” – BIOSPARK 2015 என்ற தலைப்பில், ஒரு சர்வதேச கருத்தரங்கை, பிப்ரவரி 18ம் தேதி நடத்தியது. பிரிட்டனிலுள்ள, லீட்ஸ் பல்கலையில், ஆராய்ச்சியாளர் மற்றும் இயக்குநராகவுள்ள டாக்டர்.கிஷோர் புதா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர், Infection and Immunity Current Scenario என்ற தலைப்பில், உரையாற்றினார். இந்த கருத்தரங்களின் abstract புத்தகத்தை, விருந்தினர்கள் வெளியிட்டனர்.