தேர்வு முடிவை வெளியிட கோரிக்கை
பழநி: தமிழக அரசு ஆய்வக உதவியாளர்கள் எழுத்துதேர்வு முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த மே 31ல் எழுத்துதேர்வு நடந்தது. தேர்வு முடிந்து 4 மாதமாகி விட்டதால் இனியும் காலதாமதம் செய்யாமல் ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சிமைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.