உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித் தொகை வழங்கல்

புதுச்சேரி: அருண்சர்மா தொண்டு நிறுவனம் சார்பில், ஏழை எளிய மாணவர்களுக்கு, 5 லட்ச ரூபாய் கல்வி உதவிதொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. அருண்சர்மா தொண்டு வரும் சார்பில், உழவர்கரை தொகுதி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முதற் கட்டமாக, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 3 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 5 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. நிறுவன அறங்காவலர் பிரபாதேவி தலைமை தாங்கினார். ஐ.ஜி.வீரராகு முன்னிலை வகித்தார். உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் 500 பேருக்கு, தலா ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகையாக புதுச்சேரி காங்., தலைவர் நமச்சிவாயம் வழங்கினார். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன், இளைஞர் காங்., துணைத்தலைவர் சரவணன், ஆசிரியர் ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினர்.தொ.மு.ச., மாநில செயலாளர் பிராங்கிளின் பிரான்சுவா, ஐயனாரப் பன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்