உள்ளூர் செய்திகள்

தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டிகள்

மதுரை: அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம், தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் நடந்த தேசிய போட்டிகளில் மேற்குவங்கம் முதலிடம், மகாராஷ்டிரா 2ம் இடம், கர்நாடகா 3ம் இடம் பெற்றது. தமிழகத்தின் சார்பில் உடற்குறைபாடுடைய, பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் 55 பேர் பங்கேற்றனர். 36 தங்கப்பதக்கம், 23 வெள்ளி பதக்கம் மற்றும் 23 வெண்கல பதக்கங்களை பெற்று 271 புள்ளிகளுடன் நான்காம் இடம் பெற்றனர். புதுவாழ்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகள் 18 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கல பதக்கங்களை வென்றனர். ஜூனியர் பிரிவில் பாலசுப்ரமணியன், சப்ஜூனியர் பிரிவில் கஜப்ரியா தனி நபர் சிறப்பு சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்