பள்ளி மாணவர்களுக்கு மண்வள கருத்தரங்கு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, மண்வளம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில், வேளாண் பல்கலை, இயற்கை வேளாண்மை இயக்கக தனி அலுவலர் துரைசாமி தலைமை வகித்தார். டீன் மகிமைராஜா முன்னிலை வகித்து பேசுகையில், வருங்கால சமுதாயத்தின் துாண்களான மாணவர்கள், மண் வகைகள், இயற்கை வளங்கள் குறித்த கருத்துகளை அறிந்து கொள்ள வேண்டும், என்றார். தொடர்ந்து, மாணவர்களுக்கு, மண் வளமே மனித வளம் எனும் தலைப்பில், பேச்சு மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில், 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குமுதா, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.