சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை
மதுரை: மதுரை சட்டக்கல்லுாரியில் உள்ள இக்னோ மையத்தில் சைபர் கிரைம் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற பல சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை நடக்கிறது. பட்டதாரி, வழக்கறிஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம். டிச.,31 வரை அபராதமின்றியும், ஜன., 15 வரை அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெற நேரிலோ அல்லது 94431 26668ல் தொடர்பு கொள்ளலாம் என இக்னோ கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் குமரன் தெரிவித்தார்.