தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி வாய்ப்பு
திருப்பூர்: உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், டிரைவர் மற்றும் பணிமனை உதவியாளராக பணியாற்ற விரும்புவோர், 28க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள டிரைவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, டிரைவிங் லைசென்ஸ் பெற்று, மோட்டார் வண்டி மெக்கானிசம் தெரிந்த, குறைந்தது ஆறு மாத அனுபவம் உள்ள, 30 வயதுக்கு உட்பட்ட பொதுப்பிரிவினர், விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள இரண்டு பணிமனை உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய தொழிற்சான்று அல்லது தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருத்துனர் தொழிற்பிரிவில், 35 வயதுக்கு உட்பட்ட, தாழ்த்தப்பட்ட அருந்ததிய மகளிருக்கு ஒரு இடம்; கம்மியர் மோட்டார் பிரிவில், 32 வயதுக்கு உட்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம், மொபைல் எண், டிரைவிங் லைசென்ஸ் நகலுடன், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சி.என்.ஆர்., மார்க்கெட், காந்தி நகர், உடுமலை, திருப்பூர்- 642 154 என்ற முகவரிக்கு, 28ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04252 - 223340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.